*இது வயசுப்புள்ளைகளுக்கான கதை. அதனால் வயது வந்தவர்கள் படித்து விட்டுத் திட்டலாம்*
மிகவும் நெருக்கமான ஒரு தம்பதிகளுக்கிடையில் ஒரே ஒரு சிறிய பிரச்சினை. ரொம்ப நாளாகவே. அது வேறொன்றுமில்லை. அடிக்கடி கணவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வருவதை வழக்கமாகவே ஆக்கிவிட்டான்.
மனைவியும் பல தடவை கெஞ்சி, அறிவுறுத்தி, கோபப்பட்டு பலவாறாகச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. தன்னால் நொந்துபோய் ஒருநாள் கொதித்துவிட்டாள். இன்று இரவு சீக்கிரம் வீடு திரும்பவில்லையென்றால், நான் நிச்சயமாகக் கதவைத் திறக்க மாட்டேன். இது உறுதி, வெளியில்தான் தூங்கவேண்டும்; ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினாள்.
இரவும் வந்தது. கணவனும் வந்தான். அன்றும் தாமதமாக. கதவைத்திறக்க மறுத்துவிட்டாள். கெஞ்சினான். இன்றுதான் கடைசி என்றான். அவளோ சிறிதும் இறங்கி வராமல், நீ இதுபோல் பலதடவை சொல்லிவிட்டாய். இனி இது நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் இன்று வெளியில் தூங்கு; அப்போதுதான் உனக்கு புத்தி வரும் என்று கறாறாய் சொல்லிவிட்டு ஜன்னலைப் படீரென்று அடித்துச் சாற்றிவிட்டாள்.
ஐந்து நிமிடம் பொறுத்தவன், கதவை மெதுவாகத் தட்டினான். கோபத்துடன் கதவைத் திறந்தவள், என்ன? என்றாள். சரி ஒரு பாயும் தலையணையும் கொடு என்றான். பரிதாபப்பட்டவள், இரு தருகிறேன் என்று சொல்லி, அது இரண்டையும் வெளியே எறிந்தாள். பொறுக்கிக் கொண்டான்.
பத்து நிமிடங்கழித்து, மீண்டும் கதவைத்தட்டினான். கடுப்புடன் ஜன்னலைத்திறந்தவள், இப்போ என்ன? என்று கடுமையாகக் கேட்டாள். குளிருது, எனது போர்வையை மட்டும் கொடு என்றான். இதுதான் கடைசி முறை. இனித் தொந்திரவு பண்ணாதே, நான் தூங்கணும் என்று சொல்லி போர்வையைத் தந்துவிட்டு படுக்கச் சென்று விட்டாள்.
அரை மணி நேரம் கழிந்தது. மறுபடி கதவைத் தட்டினான். நீண்ட நேரத்துக்குப் பிறகு, குரல் மட்டும் கொடுத்தாள்: முடியாது, வரமாட்டேன், முதலிலேயே சொல்லிவிட்டேன், காலையில் பேசிக்கொள்ளலாம், தூங்கு என்றாள்.
அவன் சரி, இதுதான் கடைசித்தடவை, இனிமேல் தொந்திரவு செய்ய மாட்டேன், இந்த ஒருதடவை மட்டும் நான் கேட்பதைக் கொடு, பிளீஸ், என்றான்.
அவளும் மனமிரங்கி, இனிமேல் என் தூக்கத்தைக் கெடுக்கக் கூடாது, என்ன வேணும் என்று எரிச்சலாய்க் கேட்டாள். எனது ஷூ பிரஷ் கதவுக்குப் பின்னால் இருக்கிறது அதை மட்டும் கொடு என்றான். வினோதமாய்ப் பார்த்துக்கொண்டே அதைக் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டாள். அவனும் சொன்னபடியே மீண்டும் கதவைத் தட்டவில்லை. தூங்கிவிட்டான்.
மறுநாள் காலையில் எப்போதும் போல் வேலைக்குப் புறப்படும்போது, குழப்பத்துடன் மனைவி கேட்டாள். ஆமா, நேத்து ராத்திரி பாய், தலையணை கேட்டாய், சரி. போர்வை கேட்டாய், அதுவும் சரி. ஷூ பிரஷ் எதற்குக் கேட்டாய்? என்றாள்.
அவன் சொன்னான்: எனக்கு அதுல விரலை வச்சுக்கிட்டாதான் தூக்கம் வரும்; உனக்குத்தான் தெரியும்ல?
கொன்னுட்டீங்க! சாரைப் பிழிஞ்சு லேவியமா கொடுத்துட்டீங்க. ஆனால் உண்மையெ சொல்லிடுறேன். மொஹத்தை வச்சாதான் எனக்கு தூக்கம் வரும்.
வாழ்த்துக்கள். புதுக்கடை படு ஜோராக உள்ளது. ஷோகேஸ் அருமை. வெறும் பிரஸ்ஸாக அடுக்கி வைப்பீர்கள் போலிருக்கிறது. எல்லாம் ஆபிதின் பண்ங வேலைதான். ம் ஜொதியில் கலந்துகொள்ளுங்கள். ஹா ஹா
நன்றி. பிரஷ் மட்டுமல்ல, ஷூ, மனிபர்ஸ், ப்ரீஃப்கேஸ் எல்லாமே இருக்கும். இப்ப 5 ஐட்டம்தான் இருக்கு.
ஆனாலும் அப்பாவி ஆபிதீனை இப்படி தொட்டதுக்கெல்லாம் வறுத்தெடுக்கக் கூடாது